கோபாலப்பட்டிணம், மீமிசல் பகுதியில் இரவில் பலத்த இடி, மின்னலுடன் மிதமான மழை.!நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பகலில் மழை இல்லை. மாலையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 
இந்தநிலையில் கோபாலப்பட்டிணத்தில் நேற்று இரவு 11.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மிதமாக பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரே சீராக இடைவிடாமல் இந்த மழை இரவில் பெய்தது. 

இதேபோல அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments