புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளர்-ஓட்டுனர் பணிகளுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு.!புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எம்.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம்(டிசம்பர்) 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. 

சில நிர்வாக காரணங்களால் இந்த நேர்காணல் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. நேர்காணல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments