பிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததுஆந்திராவிலிருந்து கோட்டைப்பட்டினம் அருகே உள்ள அம்மாப்பட்டினம் கிராமத்திற்கு கடப்பா கல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

பிராந்தணி அருகே லாரி வந்த போது, டிரைவர் எதிரே வந்த பஸ்சுக்கு வழிவிட சாலையோரமாக லாரியை ஒதுக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. 

இதில் லாரியில் கொண்டு வந்த கடப்பா கல் அனைத்து உடைந்து சேதமானது. லாரி டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments