ராமநாதபுரம்: 1.26 கோடி ரூபாய் நிதியுதவி!’ -நவாஸ்கனி எம்.பி உதவியால் நெகிழ்ந்த மாணவ, மாணவிகள்..!




ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகள் 700 பேருக்கு ரூ.1.26 கோடி நிதியுதவியை நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கினார்.ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி இருந்துவருகிறார். 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர் வெற்றி பெற்றது முதல் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர், அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொருளாதாரரீதியாக பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி அளித்து அவர்களை ஊக்கப்படுத்திவருகிறார்

இந்த ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு உதவும் வகையில், நிதியுதவி வழங்கும் விழா ராமநாதபுரத்தில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொருளாளர் ஷாஜகான் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பவானி ராஜேந்திரன், மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு ரூ.1.26 கோடி அளவிலான கல்வி உதவித் தொகைக்கான காசோலையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி முன்னிலையில் வழங்கினர்.




இந்த நிதியுதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் வேலுச்சாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் வருசை முகமது, ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க முன்னாள் செயலாளர் திவாகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் காசிநாத துரை, சாத்தான்குளம் ஜமாத் தலைவர் காபத்துல்லா, மண்டபம் கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் தௌபீக் அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments