பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கலை நிகழ்ச்சி மூலம் கேடயம் திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ரயில்வே கேட் அருகே இன்று 20.12.2020-ம் தேதி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் "கேடயம் (SHIELD)"திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகவரி கலை குழு மூலம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி சரக காவல் துறையின் கேடயம் (SHIELD)திட்டத்தின் உதவி எண்கள் 6383071800, 9384501999 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments