திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையப் பணிகள் 2022-ல் நிறைவுபெறும் தென்மண்டல பொறியியல் பிரிவு செயல் இயக்குநர் தகவல்..!
திருச்சி விமான நிலைய புதிய முனைய கட்டுமான பணிகள் 2022-ம் ஆண்டில் நிறைவடையும் என இந்திய விமானநிலைய ஆணையக் குழுமத்தின் தென்மண்டல பொறியியல் பிரிவு செயல் இயக்குநர் சஞ்ஜீவ் ஜிண்டல் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டி:

திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 50 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

கரோனா பொதுமுடக்கத் தின்போது பணிகள் சற்று தாமதமடைந்தன. தற்போது பணிகள் விரைவுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டத்துக்கென 38.69 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத் தப்பட்டுள்ளன.

இதில் 13.26 ஏக்கர் ராணுவப் பகுதிக்குட்பட்டது. வான் போக்குவரத்து கோபுரம் அமைப்பதற்கு சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தடையில்லாச் சான்று பெறும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. வரும் 2022-ம் ஆண்டில் புதிய முனையப் பணிகள் நிறைவுபெற்று பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

முன்னதாக புதிய முனைய கட்டுமானப் பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது விமானநிலைய இயக்குநர் தர்மராஜ், கட்டுமான பிரிவு பொது மேலாளர் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments