அறந்தாங்கியில் டெல்லி போராட்ட களத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே புது டெல்லியில் வேளான் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராடி உயிர் தியாகம் செய்த 29, விவசாயிகளுக்கு வீரஅஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏரி பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ஞாயிறு மாலை . நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு ஏரிபாசனவிவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மா, முத்துராமலிங்கன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டசெயலாளர்முபாரக் அலி, சமாஜ்வாதி கட்சி புதுக்கோட்டைகிழக்கு மாவட்ட தலைவர் சரவணமுத்து, மதிமுக நகரச் செயலாளர் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் முத்தமிழன், மக்கள் அதிகாரம் ஒருங்கினைப்பாளர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி ஏங்கல்ஸ்,மனித நேய மக்கள் கட்சி அப்பாஸ் மற்றும் விவசாயிகள் |மாதர்சங்கம் உள்பட திரளானோர் வீர மரணம் அடைந்த 29, விவசாயிகள் படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments