கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வந்ததுடன் பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வந்தனர். தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வருவதால் விவசாயிகள் மெல்ல, மெல்ல மீண்டு வருகின்றனர். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் நோய் தாக்கம் காரணமாக விவசாயிகள் மீண்டும் நஷ்டத்தி்ற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
அந்தவகையில், மணமேல்குடியை அடுத்த மணலூர், கார்க்கமலம், வெள்ளூர் மற்றும் பல்வேறு வருவாய் கிராமங்களில் காலம் தவறி மழை பெய்ததால் பயிர்கள் காய்ந்தன. ஓரளவு தாக்குப்பிடித்த பயிர்கள் நிவர் மற்றும் புெரவி புயல்களால் அதிக மழை பெய்ததால் சூரைநோய் மற்றும் வேர் அழுகல் நோய் தாக்கியுள்ளன. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
இழப்பீடு
மேலும் விவசாய பணிகளுக்காக வங்கியில் வாங்கிய கடனை எப்படி
செலுத்துவது என்று தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் சிலர் கூறுகையில், ஆட்கள் கூலி, உரம், பூச்சி மருந்து செலவு என ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவு
செய்துள்ளோம். ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால் வெகுவாக பாதிக்கப்பட்ட நாங்கள், தற்போது பயிர்களில் சூரைநாய் தாக்கியுள்ளதால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்க வேண்டும், மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.