கிராமசபை கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் ஆவுடையார்கோவில் ஒன்றிய திமுக கூட்டத்தில் தீர்மானம்..!




அதிமுகவை நிராகரிப்போம் என்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களை திரட்டி சிறப்பாக நடத்த வேண்டும் என ஆவுடையார்கோவில் ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டத்தில வலியுறுத்தப்பட்டது.
திமுக அறிவித்துள்ள அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களை ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆவுடையார்கோவில் ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய திமுக செயலாளரும், அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏவுமான உதயம்சண்முகம் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் கேசவன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திமுக அறிவித்துள்ள அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பிலான கிராமசபைக் கூட்டங்களை ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் மக்களை திரட்டி சிறப்பாக நடத்துவது. கூட்டத்தில் அதிமுக அரசின் ஊழல்களை மக்களுக்கு வெளிப்படுத்துவது. திமுக ஆட்சியில் மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக் கூறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்துரை, மாநில திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் துரைமாணிக்கம், முன்னாள் மாநில சட்ட திருத்தக்குழு உறுப்பினர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் வழி காட்டுதலின் படியும், அதிமுகவை நிராகரிப்போம் என்ற அடிப்படையின் பேரில் இன்று (23ம் தேதி) முதல் தேர்தல் பிரசாரம் மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. 

அதன்படி இன்று காலை 9 மணிக்கு முதன் முதலாக திமுக வடக்கு ஒன்றியம் ராங்கியன் விடுதி ஊராட்சியில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் மதியழகன் தலைமையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். மேலும் மாலை சிறப்பு கிராமசபை கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் திமுக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments