புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!!மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்ளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நடைமுறைப் படுத்தியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பஞ்சாப்,ஹரியானா,மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும் விவசாய சங்கத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு விரோதமான திருத்தச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் அதேபோல் இயற்கை வளங்களை அழிக்கும் சுற்றுச்சூழல் 2020 திருத்தச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments