புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்...



குறைந்தபட்ச மாத உதவித்தொகையாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைந்தபட்ச மாத உதவித்தொகையாக ரூபாய் 3 ஆயிரம், கடுமையாக ஊனமுற்றோருக்கு ரூபாய் 5 ஆயிரமும் வழங்க வேண்டும். தனியார்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். 

அரசின் பின்னடைவு காலிப்பணியிடங்களை கண்டறிந்து 3 மாதத்தில் நிரப்ப வேண்டுமென்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் தலைமை வகித்தார்.  

மாவட்டப் பொருளாளர் ஜி.கிரிஜா, துணைச் செயலாளர் எம்.கணேஷ், துணைத் தலைவர் ஏ.சண்முகராஜா, நகரத்தலைவர் ராமகிருஷ்ணன்,  செயலாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் ஹாட்சாபாய், ரமேஷ், சீனி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments