சமூக ஆர்வலர்கள் கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் நூலகத்தை மேம்படுத்த வேண்டும் மாணவர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை..!




புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் உள்ள நூலங்களை மேம்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு மன்னர் கலை அறிவியல் கல்லு£ரி, அரசு மகளிர் கல்லூரி, கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லு£ரி, அறந்தாங்கி கலை அறிவியல் கல்லூரிகள் என 4 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இதில் அறந்தாங்கி கலை அறிவியல் கல்லூரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக செயல்படுகிறது. இந்த கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரிகளில் உள்ள நூலங்களில் போதிய புத்தகங்கள் இல்லை என்றும் தற்போது புதிதாக வந்துள்ள புத்தகங்களை கொள்முதல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் கல்லூரி மாணவர்கள் பாடபுத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பாடபுத்தகத்தை மட்டுமே படித்தால் அவர்களால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியாது. பொது புத்தகம் படித்தால் சிந்தனை பிறக்கும் என்பார்கள். அதற்கு ஏற்றார்போல் கல்லூரிகளில் ஆண்டுக்காண்டு தொடர்ந்து புதிய புதிய புத்தகங்களை வாங்கி மாணவர்கள் பயன்பாடிற்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மாணவர்கள் பாடங்கள், பொது அறிவு, அறிவியல் அறிவு, அரசியில் அறிவு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தங்களை அறிவுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும். இதனை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள நூலங்களை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments