புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் தகவல்.!!புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டிற்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மகளிர் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதுவரை உள்ளாட்சி அமைப்பு வாரியாக போதுமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஆகவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பணிபுரியும் அல்லது சுயதொழில் செய்யும் பெண்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments