ராஜேந்திரபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய கிளை துவக்க விழா.!!எஸ்டிபிஐ கட்சியின் புதிய கிளை துவக்க விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் ராஜேந்திரபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கட்சியின் மாவட்ட தலைவர் ஜலாவுதீன் தலைமையில் பல்வேறு கட்சியில் இருந்தவர்கள் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராஜேந்திரபுரம் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ச்சியாக ராஜேந்திரபுரம் பகுதியில் கட்சியின் கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. 

இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் ஜகுபர் அலி மற்றும் மாவட்ட செயலாளர் ஜியாவுதீன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர்கள் முஹைதீன் தாஹா, முஹம்மது முஹைதீன், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் சிராஜ், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் அப்துல் சுபாஹான் மற்றும் மேற்பனைக்காடு கிளை நிர்வாகிகள் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments