ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மதரஸாவில் பாங்கு சொல்லும் போட்டி..!!ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மதரஸாவில் பாங்கு சொல்லும் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுக்கா, ஏம்பக்கோட்டை மஹல்லாவில் உள்ள ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸாவில் 30.11.2020 அன்று அஸர் தொழுகைக்குப் பின் சிறார்களுக்கான பாங்கு சொல்லும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 7 வயது முதல் 15 வயது வரை உண்டான 20 மாணவர்கள் பங்குபெற்றனர். 

நிகழச்சியின் நடுவராக ஏம்பக்கோட்டை மஸ்ஜித் தாருஸ்ஸலாம் பள்ளி இமாம் மௌலவி, முகமது ரபீக் ரியாஜி ஹஜரத் அவர்கள் போட்டியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுமக்கள், ஜமாஅத்தார்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பாங்கு சொல்லும்போட்டியில் 1.ஷமீம் முதலிடத்தையும், முகமது அயாஸ் இரண்டாமிடத்தையும், ஹஸன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நேற்று 01.12.2020 ரஹீமா பரக்கத் நிர்வாகம் மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக மதரஸாவின் ஆசிரியர்கள் மௌலவி.பாஜில்.காரி.J. முகமது மைதீன் தாவூதி மற்றும் மௌலவி.முஜாஹித் முனீரி ஹஜரத் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments