உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி பஹிரத் குஷ்வாஹா. இவருக்கு இரண்டு மகள்களும், 4 வயதில் கணேந்திரா என்ற மகன் உள்ளனர்.
பஹிரத் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது கோதுமை வயலுக்கு நேற்று சென்றிருந்தார். அங்கு தனது மகனை விளையாட விட்டுவிட்டு குடும்பத்தினர் அனைவரும் கோதுமை வயலில் வேலை செய்துகொண்டிருந்தனர்.
வேலையை முடித்து விட்டு குடும்பத்தினர் அனைவரும் மதியம் 12 மணியளவில் கோதுமை வயலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது வயலில் விளையாடிக்கொண்டிருந்த கணேந்திராவை காணவில்லை என்பதை உணர்ந்த குடும்பத்தினர் குழந்தையை தேடினர்.
அப்போது கோதுமை வயலில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை கணேந்திரா தவறி விழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு பஹிரத் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர்.
ஆழ்துளை கிணறு 60 அடி ஆழம் கொண்டது எனவும், தற்போது குழந்தை 30 அடி ஆழத்தில் உள்ளது எனவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
8 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் குழந்தை மூச்சுவிட ஏதுவாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிஸ்கட் மற்றும் பால் போன்ற உணவு பொருட்களும் குழந்தைக்கு கயிறு மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது வரை குழந்தை நலமுடன் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் மண்ணை தோண்டி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.