கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்று வட்டார மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!!
கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்று வட்டார  மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் புரெவி புயல்  டிசம்பர் 3 குமரிக் கடல் பகுதியை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது

இந்நிலையில்  புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியிலும் புரேவி புயலின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதன்  முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக தங்ளது படகுகளை (வத்தை) & போட்டுகளையும்  ஆத்துவாயலில் போடும்படியும் அல்லது கரையேற்றும்படியும் மேலும் தங்களது மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுமாறும் மீன்வளத்துறை & வருவாய்துறையின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

எனவே மீனவர்கள் இந்த தகவலை இலேசாக எண்ணி இருந்துவிடாமல் தங்களது படகுகளை (வத்தை) போட்டுகளை & வலைகளையும்  பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுமாறு GPM MEDIA சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments