புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்…!பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகம் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளின் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் 03.12.2020 வியாழன் மாலை 5.30 மணியளவில் மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் அமலாக்கதுதுறையக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை டிவிஷன் தலைவர் S.அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாண்டல தலைவர் S.ரஷீத் அஹமது மற்றும் SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் H.சலாஹுதீன், SDPI-கட்சியின் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது அஹமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 

மேலும் திருச்சி மாண்டல செயலாளர் S.ரஷீத் அஹமது தனது கண்டன உரையில், அமலாக்கத்துறை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர்களின் வீடுகளில் சோதனைகளை நடத்துகிறது. இது விவசாயிகளின் பிரச்சனையை திசை திருப்பவும், பாஜக அரசின் தோல்வியை மறைப்பதற்குமான இழிவான முயற்சியாகும். அரசியலமைப்பு நிறுவனங்களை அரசியல் கருவியாக பயன்படுத்துவதற்கான மற்றொரு உதாரணம் இதுவாகும். இத்தகைய நடவடிக்கைகள் நீதிக்கான குரலை எழுப்புவதிலிருந்து நம்மைத் தடுக்கவோ அல்லது உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டங்களை பலவீனப்படுத்தவோ முடியாது என்றும் கூறினார்.
  
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உட்பட 200-க்கும் அதிகமனோர் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இறுதியாக கறம்பக்குடி ஏரியா செயலாளர் A.சையது அப்துல் காதர் நன்றியுரையாற்றினார்.

தகவல்:
M.அபுபக்கர் சித்திக்,
புதுக்கோட்டை டிவிஷன் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
திருச்சி புதுக்கோட்டை ஒருங்கிணைந்த மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments