கோபாலப்பட்டிணம், மீமிசல் பகுதிகளில் புரெவி புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை துணை ஆட்சியர் வட்டாட்சியர் ஆய்வு.!!கோபாலப்பட்டிணம், மீமிசல் பகுதிகளில் புரேவி புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை துணை ஆட்சியர் வட்டாட்சியர் ஆய்வுமேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்காவில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று 3.12.2020 புரேவி புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை ஆட்சியர் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டனர். புரேவி புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் கடற்கரை பகுதியான கோபாலப்பட்டிணத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. எனவே கடற்கரை பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் MKR திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்கவைக்கப்பட்டிருந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தாங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் பற்றி புகார் தெரிவித்தனர்.

அதனை ஏற்று கோபாலப்பட்டிணம் பகுதியில் அவுலியா நகர் பகுதி, மழை நீர் தேங்கி உள்ள பகுதி மற்றும் குளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின் போது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர், ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments