ஆலங்குடி அருகே இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவிகள் இருவா் உயிரிழப்பு...ஆலங்குடி அருகே இரு வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து, பள்ளி மாணவிகள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கே.வி.எஸ்.தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சுவேதா (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஆலங்குடி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டின் மாடியில் உள்ள பால்கனியில் காயப்போட்டு இருந்த துணிகளை சுவேதா எடுக்க முயன்றார். அப்போது, தாழ்வாக சென்ற மின்கம்பியில் அவரது உடல் உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் அலறி துடித்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட் டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதேபோல் ஆலங்குடியை அடுத்த நம்பன்பட்டியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தர். இவருடைய மகள் அஞ்சலி (17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில், அந்த பகுதியில் லேசான மழை பெய்தது. 

இந்த நிலையில் அஞ்சலி வீட்டின் பக்கம் மின்கம்பத்தின் அருகில் உள்ள எர்த் கம்பியை தெரியாமல் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அதில் இருந்து வந்த மின்சாரம் அஞ்சலியின் உடலில் பாய்ந்தது. 

இதில் மயக்கம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆலங்குடி பகுதியில் மழைக்கு 2 மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத் தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments