கோட்டைப்பட்டினத்தில் செல்போன் கடையில் கொள்ளையடித்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல்துறையினர்.!!கோட்டைப்பட்டினம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் உமர் (வயது 24). இவரது கடையில் கடந்த 2-ந்தேதி ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதனையடுத்து இவர்களை பிடிக்க கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாமுவேல் ஞானம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருட்டு ஆசாமிகள் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு இருந்த 5 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டத்தை மூர்த்தி (32), ராமேசுவரம் பகுதியை சேர்ந்த கோட்டைமணி (45), பூம்பூகார் பகுதியை சேர்ந்த அகத்தியன் (22), திருகடையூர் பகுதியை சேர்ந்த ராவணன் (24) ,தொண்டி புதுக்குடியை சேர்ந்த புரட்சிக் கண்ணன் (35) என தெரிய வந்தது. 

இதனையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து செல்போன்களை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் அறந்தாங்கி கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்போன் திருட்டு கும்பலை பிடித்த போலீசாருக்கு வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments