புரெவி புயல் காரணமாக கனமழை காவிரி பாசன ஏரிகள் நிரம்பின


அறந்தாங்கி: புரெவி புயல் காரணமாக அறந்தாங்கி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக காவிரிப்பாசன ஏரிகள் முழு கொள்ளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி காவிரி நீரைக் கொண்டு பாசன வசதி பெறுகின்றன. கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டங்கள் காவிரி பாசன வசதி பெறும் பகுதியாக உள்ளன. இப்பகுதிக்கு கல்லணைக் கால்வாய் மூலம் காவிரிப்பாசனம் நடைபெற்று வருகிறது. துப்பணித்துறை கல்லணைக் கால்வாய் கோட்ட ஆயிங்குடி பிரிவின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வட்டத்தின் ஒருபகுதியும், தஞ்சாவு+ர் மாவட்டத்தின் ஒருபகுதியும் பாசன வசதி பெறுகின்றன. ஆயிங்குடி பிரிவில் 58 ஏரிகள் மூலம் காவிரிப்பாசனம் நடைபெற்று வருகிறது. இதேப்போல பொதுப்பணித்துறை கல்லணைக் கால்வாய் கோட்ட நாகுடி பிரிவில் 110 ஏரிகள் மூலம் காவிரிப்பாசனம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கருக்கு காவிரி நீர் பாசனம் நடைபெற்று வருகிறது.

கடந்த காலங்களில் புதுக்கோட்டை மாவட்ட காவிரிப்பாசன பகுதிகளில் விவசாயிகள், காவிரி நீரைக் கொண்டு 2 போகம் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் தற்போது கல்லணைக்கால்வாய் முறையாக பராமரிக்காத காரணத்தால் ஒரு போக சாகுபடியே கேள்விக்குறியாக உள்ளது. தற்போது இப்பகுதியில் காவிரி நீர் வந்தபோதிலும், போதுமான மழை பெய்தால் மட்டுமே இப்பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும். கடந்த சில ஆண்டுகளாக முறையாக தண்ணீர் வந்து சேராததால், இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கல்லணைக் கால்வாயில் போதுமான தண்ணீர் வந்ததால் இப்பகுதியில் உள்ள ஏரிகளில் சுமார் 40 முதல் 80 சதவீத தண்ணீர் நிறைந்தது. கல்லணைக் கால்வாய் பாசன ஏரிகளில் தண்ணீர் இருப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து புரெவி புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் காவிரி பாசன ஏரிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கல்லணை மூடப்பட்டாலும், கல்லணைக் கால்வாயில் வந்த மழைநீர், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழைநீர் அனைத்தும் இணைந்து இப்பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்பியது.

ஆயிங்குடி பிரிவில் உள்ள பெரிய ஏரியாக தஞ்சாவு+ர் மாவட்டம் பேராவு+ரணி வட்டம், பெருமக;ர் ஏரியும், நாகுடி பிரிவில் உள்ள பெரிய ஏரிகளாக ஆத்தமூர் ஏரி, இடையாத்திமங்கலம் ஏரியும் விளங்குகிறது. தற்போது பெய்த பலத்த மழையின் காரணமாக பெருமக;ர், ஆத்தமூர், இடையாத்திமங்கலம் உள்ளிட்ட பெரிய ஏரிகள் உள்ளிட்ட 168 ஏரிகளும் முழுதும் நிரம்பியுள்ளன. புதுக்கோட்டை மாவட்ட காவிரிப்பாசன பகுதிகளில் உள்ள 168 ஏரிகளில் பெரும்பாலான ஏரிகளில் உபரி நீர் போக்கிகள் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு காவிரிப்பாசன பகுதி ஏரிகள் முழுதும் நிரம்பிய நிலையில், குடிமராத்து செய்யப்படாத பல ஏரிகளின் கரைகள்(குறிப்பாக நிலையு+ர், தினையாகுடி ஏரிகள்)உடைப்பெடுக்கும் நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொதுமக்களின் துணையுடன் கரைகளை சீரமைத்து, கரைகள் சேதமடையாத அளவிற்கு பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் (தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்பட) காவிரி பாசன ஏரிகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments