டிசம்பர்-6 பாபரி மஸ்ஜித் ,மீமிசல் நகரில், SDPI (எஸ்டிபிஐ) கட்சி சார்பாக பெரும் கண்டன ஆர்ப்பாட்டம்மீமிசல்-ல் நடைபெற்ற டிசம்பர்-6 பாபரி மஸ்ஜித் போராட்டம்:
பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு!
பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிடு!
1991 வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்து!


ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மீமிசல் நகரில், SDPI (எஸ்டிபிஐ) கட்சி சார்பாக பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தலைவர் N.M.ஹனிபா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏரியா பிரசிடென்ட் SRM ஷர்புதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி சிறிய உரை நிகழ்த்தினார்கள்.
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் SAM அரபாத் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
இப்போராட்டத்தில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அர்ஷத் அகமது அல்தாஃபி அவர்களும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் NSM.நஜ்முதீன் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். 
இறுதியாக மீமிசல் கிளை தலைவர் யாசின் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்த அனைத்து பெண்கள், ஆண்கள், தாய்மார்கள், எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர்கள், செயல்வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவன்:
சேக் பரிது,
கோபாலபட்டினம் கிளை செயலாளர்,
SDPI கட்சி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments