அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் மழையினால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
தொடர் மழையினால் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதற்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், அன்னவாசல், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, செங்கப்பட்டி, குடுமியான்மலை, காட்டுப்பட்டி, புதூர், பரம்பூர், வயலோகம், கடம்பராயன்பட்டி, கீழக்குறிச்சி, பெருமநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்தது.

இதனால், பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. வயல்களில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் கால்வாய் அமைத்து வெளியேற்றி வருகின்றனர்.


இழப்பீடு வழங்க கோரிக்கை


மழையினால் நெற் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments