புதுக்கோட்டையில் 3 நாட்கள் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம்முன் 14ம் தேதி முதல் மூன்று நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோமையா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி டிச.14ம் தேதியிலிருந்து 16ம் தேதி வரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர் .

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments