அமலாக்கத்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் PFI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.!அமலாக்கத் துறையினரை கையில் வைத்துக் கொண்டு மத்திய அரசு ஜனநாயக இயக்கங்களை மிரட்டுவதாகக் கூறி, புதுக்கோட்டையில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மண்டலச் செயலா் எம். அபுபக்கா் சித்திக் தலைமை வகித்தாா். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் சலாவுதீன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் காசிநாததுரை, புதுக்கோட்டை பகுதிச் செயலா் ஹசனுதீன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments