புதுக்கோட்டையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி.!!புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சீராக செல்வதில் தடைப்பட்டு வந்தன.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவின் பேரில், புதிய பஸ் நிலையம் அருகே காட்டுபுதுக்குளம் வாய்க்கால், சந்திரமதி வாய்க்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றும் பணியை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன் தலைமையில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

குன்னான்குளம் பகுதிகளில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

அதை தொடர்ந்து நேற்று காலை குளத்தின் கலிங்கி பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்திருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. ம

ழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அத்துமீறி இடையூறு விளைவிப்பதாக தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments