மீமிசல் ECR சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விபத்து ஏற்படும் அபாயம்..! ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.?



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் ஓய்வு எடுக்கும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

சென்னையில் இருந்து கண்ணியாகுமரிக்கு கடற்கரை மாவட்டங்கள் வழியாக செல்ல முக்கிய சாலையாக  நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை விளங்கி வருகிறது. மாநில சாலையான இந்த சாலையில் உள்ள முக்கிய ஊராக மீமிசல் உள்ளது.

மூன்று முக்கிய சாலையை சந்திக்கும் பகுதியாக உள்ள மீமிசல் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மருத்துவமனை, வங்கி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்கள் இங்கு உள்ளதால், ஏராளமான பொதுமக்களும் இங்கு வந்து செல்கின்றனர்.

மீமிசல் கிழக்கு கடற்கரை  சாலையில் ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் நேரிடுகின்றன.

 இதுபோன்ற விபத்துக்களில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இரவு நேரங்களில் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் கால்நடைகள் சாலையின் மையப்பகுதியில் படுத்து ஓய்வு எடுப்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால், இந்த முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே சென்று வருகின்றனர். 

எனவே மாவட்ட நிர்வாகமும், மீமிசல் ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments