டாக்டர் கபீல்கான் விடுதலையை எதிர்த்த உத்தரப்பிரதேச அரசின் மனு தள்ளுபடி




மருத்துவர் கபீல்கான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய உத்தரப்பிரதேச அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்தபோது, குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல உயிர்களைக் காப்பாற்றியவர் என கூறப்பட்டவர் டாக்டர் கஃபீல் கான்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டாக்டர். கபீல் கான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். 

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் கபீல் கானை விடுவிப்பதற்கான மனுவின் மீது பதினைந்து நாட்களுக்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் கபீல்கானை தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்டவிரோதம் என விமர்சித்ததுடன் அவர் பேச்சில் அலிகார் நகரத்தின் அமைதி மற்றும் அமைதியை எங்கும் அச்சுறுத்தவில்லை எனக் குறிப்பிட்டுஅவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வியாழக்கிழமை இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது ஒரு நல்ல தீர்ப்பு, இந்தத் தீர்ப்பில் நாங்கள் தலையிட மாட்டோம் எனக் கூறி உத்தரப்பிரதேச அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments