WhatsApp Pay : உங்க பேங்க் அக்கவுண்ட்டை வாட்ஸ்அப்பில் Add செய்வது எப்படி?




சமீபத்தில் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட வாட்ஸ்அப் பே சேவையானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றுடன் நேரலைக்கு வந்துள்ளது.

இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவிற்கு வந்துள்ள வாட்ஸ்அப் பேமண்ட் சேவை கடந்த நவம்பர் மாதத்தில் National Payments Corporation of India-வின் (NPCI) ஒப்புதலை பெற்றது. அதன் வழியாக இந்த சேவை 160 க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் (Unified Payment Interface - UPI) நேரலைக்குச் செல்வது உறுதி செய்யப்பட்டது.

அதனொரு பகுதியாக, WhatsApp Pay இப்போது இந்தியாவின் 4 டாப் வங்கிகளின் வழியாக அதன் சேவையை தொடங்கியள்ளது. மேலும் பியர்-டு-பியர் (P2P) கட்டண அம்சம் இப்போது வாட்ஸ்அப்பின் 10 இந்திய பிராந்திய மொழி பதிப்புகளில் அணுக கிடைக்கிறது.


- உங்கள் Android ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பிற்குள் நுழைந்து உங்கள் சாட் விண்டோ-வை திறந்து மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்தான புள்ளிகளை கிளிக் செய்யவும்.

- பின்னர் காட்சிப்படும் பட்டியலில் Payments என்கிற விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.

- Payments விண்டோ திறந்ததும், Add new payments method என்பதை கிளிக் செய்யவும்

- பின்னர் வாட்ஸ்அப்பின் கட்டண விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்க accept and continue என்பதை கிளிக் செய்யவும்.

- இப்போது, ‘verify via SMS’ என்பதை கிளிக் செய்யவும், பின்னர் allow என்பதை கிளிக் செய்யவும்.

(பின்குறிப்பு: தொலைபேசி அழைப்புகளை நிர்வகிக்க வாட்ஸ்அப்பிற்கு ஏற்கனவே நீங்கள் அனுமதி இருந்தால், தற்போது அனுமதி வழங்கத் தேவையில்லை)

- இப்போது வங்கிகளின் பட்டியலிலிருந்து உங்கள் வங்கியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

- பின்னர், வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பவும் பெறவும் நீங்கள் சேர்க்க விரும்பும் வங்கி அக்கவுண்ட்டை கிளிக் செய்யவும்.

- பின்னர் done என்பதை கிளிக் செய்யவும், அவ்வளவுதான்.



பின்குறிப்பு:

- பணத்தை அனுப்ப, உங்கள் டெபிட் கார்டின் கடைசி 6 இலக்கங்களையும் அதன் காலாவதி தேதியையும் வெரிஃபை செய்ய வேண்டும்.

- குறிப்பிட்ட வங்கியை செட் செய்யும் போது மட்டுமே நீங்கள் payments terms and privacy policy-ஐ ஏற்க வேண்டி இருக்கும்.

- பட்டியலில் உங்கள் வங்கியை நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், அது வாட்ஸ்அப் பெ சேவையை ஆதரிக்கப்படாமல் போகலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments