90s கிட்ஸ்களும் - வாடகை சைக்கிள் கடைகளும்.!




சைக்கிள் ஓட்டுவது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு பிறகுதான் சில வருடங்களாக பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் தற்சமயம் சைக்கிள் ஓட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.

தற்சமயம் ஓட்டும் சைக்கிளின் விலையை கேட்டால் சற்று அதிர்ச்சியாகதான் இருக்கும். ஆனால் ஒருகாலகட்டத்தில் சைக்கிள் என்பது அடிதட்டு மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் ஒரு எட்டாகனி போலவே காணப்பட்டது.என்ன தான் விமானமே ஒட்டினாலும் அதற்கு அச்சாரம் சைக்கிள்தான்.

தற்சமயம் வரும் சைக்கிள்கள் சிறிதாக இரண்டு சக்கரம் வைத்து கீழே விழாமல் சைக்கிள் ஒட்டி பழகலாம் ஆனால் அந்த காலக்கட்டத்தில் கண்டிப்பாக கீழே விழுந்து தான் கற்றுக்கொள்ள முடியும்.அதற்கு ஒரு பழமொழி கூட வைத்திருப்பார்கள் சைக்கிள் ஓட்டணும்னா கீழ விழுந்துதான் ஆகணும் என்று.

90கிட்ஸ் பள்ளி விடுமுறை நாட்களில் வாடகை சைக்கிள் கடையே என்று கிடப்பார்கள். கொஞ்சம் கொஞ்சம் காணாமல் போன சைக்கிள் கடை இன்னும் சில மாவட்டங்களில் இன்னும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது.அதற்கென தனி நோட்டுகளில் நேரம் குறிப்பிட்டு அதற்கான நேரத்திற்க்குள் திரும்ப ஒப்படைக்க வேக வேகமாக வருவது என்பது ஒரு சுவாரஸ்யமான பொழுது போக்கு.

அந்த காலத்தில் சில ஊர்களில் வாடகை சைக்கிள் கடை இல்லாததால் கூட நிறைய பேர் சைக்கிள் ஒட்டவே பழகாத வரலாறேலாம் உண்டு. ஆனால் 90வரை சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டர்வர்கள் அனைவருமே வாடகை சைக்கிளை வைத்துதான் கற்றுக்கொண்டிருப்பார்கள்.

யாரும் துணைக்கு இல்லாமல் தன்னந்தனியே சைக்கிள் ஓட்டுவதில் ஆரம்பமாகிறது ஒருவனுடைய தன்நம்பிக்கை. ’வாடகை சைக்கிள் கடைக்காரர் வீட்டில் இருந்து பெரியர்கள் வந்து சிபாரிசு செய்தால்தான் சைக்கிள் கொடுப்பார்கள்’. ’நேரம் அதிகம் ஆகிவிட்டால் அதிக காசு ஆகிவிடும் என்று பயந்து கொண்டு சீக்கிரமா செல்வது’. நம் உயரத்திற்கான சைக்கிள் வரும் வரை அக்கடையிலே அடைகாத்த கோழி போல அமர்ந்திருப்பது. ’பாதி நேரம் சைக்கிள் செயின் அவிழ்ந்து விடும் அதை சரிசெய்வது’என்று ஒரு காவிய வரலாற்று தொடரே எடுக்கலாம் வாடைகை சைக்கிள்கடையை பற்றி.

2001ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான இலவச சைக்கிள் திட்டத்தால்தான் முதன் முதலாக பலர் வீட்டில் சைக்கிளே விஜயமானது. பிறகுதான் பெண்களும் சகஜமாக சைக்கிள் ஓட்டும் கலாச்சாரமும் தோன்றியது.

மெல்ல மெல்ல வாடகை சைக்கிள் கடை, பழுதுநீக்கும் இடமாக மாறியது. தற்சமயம் Smart Cycle கள் வாடகைக்கு விடப்படுகிறது ஆனாலும் வாடகை சைக்கிள் என்றால் சிலருக்கு மட்டும் பழைய நினைவுகளை தூசி தட்ட ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான் நிசப்தமான உண்மை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments