புதுக்கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து




புதுக்கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில்  பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரான்சிஸ் ஆபிரகாம். இவர் புதுக்கோட்டை அரசு கலை கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் தனது குடும்பத்தோடு தனது சொந்த ஊரான சாத்தூருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று அவரது வீட்டிற்குள் வெடி வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து வீட்டுக்குள் இருந்து புகை மண்டலமாக புகை வெளியேறியது. இதை பார்த்த அந்த அடுக்கு மாடியில் குடியிருப்பவர்கள்  அக்கம் பக்கத்தினர் அச்சம் அடைந்து உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

வீட்டிலிருந்து பயங்க வெடி சத்தம் கேட்டதார் பூங்கா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

மேலும் இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுதனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைத்து வந்த தீயணைப்புத் துறையினர் முதலில் தீ விடத்து நடந்த வீட்டிற்குள் இருக்கும்  புகையை வெளியேறும் வகையில் வீட்டின் ஜன்னலை உடைத்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது பிரிட்ஜ் வெடித்து இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.



வீட்டில் இருந்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இந்த தீ விபத்து குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டியிருந்த வீட்டிற்குள் இருந்து பயங்கர சத்ததுடன் வெடி சத்தம் கேட்டவும் அந்த வீட்டிலிருந்து கரும் புகை வந்ததால் அச்சமடைந்து அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சாலைகளில் தஞ்சமடைந்ததால் மேலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments