அறந்தாங்கி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
அறந்தாங்கி அருகே தனியார் பேருந்தில் ஏறும்போது மூதாட்டி தவறி விழுந்து பலியானார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த முடச்சிக்காட்டை சேர்ந்தவர் ஜெபமாலை மனைவி சந்தானம்மேரி (60). இவர் புதுக்கோட்டை மாவட்டம் அமரசிம்மேந்திரபுரத்தில் உள்ள நீதிராஜ் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காலை அறந்தாங்கியில் இருந்து பேராவூரணிக்கு வந்த தனியார் பேருந்தில், பேராவூரணிக்கு செல்வதற்காக அமரசிம்மேந்திரபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். பேருந்து வந்தபோது, சந்தானம்மேரி முன்பக்க படிக்கட்டில் ஏறியுள்ளார். அவர் ஏறுவதற்குள் பேருந்தை ஓட்டுனர் எடுத்ததால், சந்தானம்மேரி பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகுடி போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments