புதுக்கோட்டையில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் இன்று மதியம் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இந்த குடோனுக்கு அருகில் ஒரு மருத்துவமனை, தனியார் பள்ளி ஆகியவை உள்ளன. பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் அங்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. 


இதற்கிடையில் 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடோனில் இருந்த பழைய பேப்பர்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments