கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசமும் முடிவடையும் நிலையில் இருப்பதால் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று சூழல் இன்னும் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments