வடகாடு அருகே ரேஷன் கடையில் பயோமெட்ரிக் எந்திரத்தில் கோளாறு: பொருட்கள் வாங்க முடியாததால் பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள சிக்கப்பட்டியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு பொருட்கள் வாங்க கிராம மக்கள் வந்திருந்தனர். அப்ேபாது ரேஷன் கடையில் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.


இதனால், ரேஷன் பொருட்கள் வாங்க காலையில் வந்த பொதுமக்கள் மாலை வரை காத்திருந்தும் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் உடனடியாக தங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆலங்குடி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments