டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மீமிசலில் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  

 
        டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மீமிசலில் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பாஷிச பாஜக அரசின் புதிய வேளான் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வரும் (30.12.2020, புதன்கிழமை), மாலை 3 மணிக்கு  மீமிசல் பேருந்து நிலையம் அருகில் SDPI கட்சி முன்னெடுக்கும் விவசாயிகளின் விரோதி மோடி என்னும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. 
       இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்   ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் நவாஸ்கனி எம்பி அவர்களும், SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்களும், உமன் இந்தியா மூவ்மென்ட் அமைப்பின் மாநிலச் பொதுச்செயலாளர் சகோதரி பாத்திமா கனி அவர்களும் அறந்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோ. உதயம் சண்முகம் அவர்களும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில விவசாய அணி துணை தலைவர் சகோ. S.செல்வரத்தினம் அவர்களும் மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.
     விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் இப்போராட்டத்தில், அனைத்து தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய அமைப்புகள், அமைப்புசாரா விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எதிரான பாஜக அரசின் 3 கருப்பு சட்டங்களை துடைத்தெரிவதற்கு முன்வர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன் அழைப்பது:
SDPI மீமிசல் நகரம்,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
தொடர்புக்கு: 8754627970
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments