நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி 

   
        தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்த நிலையில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்தின் சாதகமற்ற பதிலானால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. 


இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-

” நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படும். பாடத்திட்டம் குறைக்கப்பட்ட போதிலும் தேர்வு நடைபெறும். 

இந்த கல்வியாண்டு பூஜ்யம் கல்வியாண்டாக இருக்க வாய்ப்பில்லை. பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும். கல்வி தொலைக்காட்சியில், திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருந்தது தொடர்பான விவகாரத்தில் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments