உலமாக்கள் உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் வக்பு வாரிய தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.உலமாக்கள் உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் வக்பு வாரிய தலைவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் அரசு கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதை பாராட்டுகிறேன்.

கொரானாவால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் குடும்பம் ஒன்றிற்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க உத்தரவிட்டது. புனித யாத்திரை செல்லும் கிறித்தவர்களுக்கு சலுகைகளை உயர்த்தி வழங்கியது. கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்வு என தொடர்ந்து சில மக்கள் நல அறிவிப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது. எம்மதமும் சம்மதம் என்ற வகையில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு
வக்பு வாரியத்தின் மூலமாக நலிந்த உலமா பெருமக்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொகை தற்போதைய விலைவாசி நிலையை கருத்தில் கொள்ளும் போது போதுமானதாக இல்லை. எனவே தமிழக அரசு உலமாக்கள் உதவித்தொகையை ரூ.5000 உயர்த்தி வழங்கிட ஆவன செய்ய வேண்டும். மேலும் உலமாக்கள் உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ள தகுதியான நபர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments