புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகளை பதிக்க இடங்கள் தேர்வு செய்யும் பணி நிறைவு




            புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகளை பதிக்க இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நிறை வடைந்துள்ளன.

செயற்கை பவளப்பாறை மீன்கள் மற்றும் கடலிலுள்ள இதர உயிரினங்களுக்கு வாழ் விடமாகவும், இனப்பெருக்க தளமாகவும் விளங்கி வருகிறது. எனவே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங் களின் கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகளை பதிக்க மீன்வளத்துறை முடிவு செய்தது.



இதை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 30 இடங்களில் கடந்த ஆகஸ்ட்டு மாதம் செயற்கை பவள பாறைகள் பதிக்கும் பணிகள் தொடங்கின. 45 நாட்களில் செயற்கை பவள பாறைகள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்தன.

இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகள் பதிப்பதற்கு சாதகமான இடங்களை தேர்வு செய்யும் பணியில் மத்திய கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் விஞ்ஞானிகள் தலைமை யிலான குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் 10 இடங்கள் செயற்கை பவள பாறைகள் பதிப்பதற்கு சாதகமான இடங் களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. செயற்கை பவள பாறைகள் வடி வமைக்கும் பணிகளும் நிறை வடைந்துவிட்டன.

எனவே, விரைவில் புதுக் கோட்டை மாவட்ட கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகள் பதிக்கும் பணி தொடங்கப்படும். இப்பணிகள் முடிந்தவுடன் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட கடல் பகுதிகளில் அடுத்தடுத்து செயற்கை பவள பாறைகள் பதிக் கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments