தொண்டி அருகே 9 மாதங்களுக்குப் பிறகு காரங்காடு சூழல் சுற்றுலா நாளை தொடக்கம்




தொண்டி அருகே காரங்காடு மாங்குரோவ் சூழல் சுற்றுலா மற்றும் படகு சவாரி வரும் புத் தாண்டு முதல் தொடங்குகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே காரங்காடு கடற் கரை கிராம சதுப்பு நிலக்காடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலக்காடுகள் (மாங்குரோவ் காடுகள்), வலசை வரும் பற வைகள், கடலில் அரியவகை உயிரினங்களை ரசிக்கும் வகை யிலும், படகு சவாரி செய்யவும் வசதியாக உள்ளது. கரோனா தொற்றால் காரங்காடு சூழல் சுற்றுலா மையமும் மூடப்பட்டது.

இந்நிலையில் 9 மாதங்களுக்குப் பிறகு நாளை (ஜனவரி 1) முதல் காரங்காடு சூழல் சுற்றுலா தொடங் குகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் அ.சோ.மாரி முத்து கூறியதாவது, காரங்காடு சூழல் சுற்றுலா மையம் ஆங்கிலப் புத்தாண்டு முதல் தொடங்கப்படு கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு வெப்பநிலை சரி பார்ப்பது, முகக் கவசம் அணிவது, கைகளில் கிருமிநாசினி உபயோகிப்பது போன்ற கட்டுப்பாடுகளுடன் அனு மதிக்கப்படுவர்.

படகு சவாரி செய்ய ஒருவருக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் அங்கேயே உணவும் தயாரித்து வழங்கப்படும். சூழலி யல் சுற்றுலாச் செல்வோர் உணவுக்கு 7598711620 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம், என்றார்.

ராமநாதபுரம் வனச்சரக அலு வலர் சு.சதீஷ் கூறியதாவது:

முன்பதிவு அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவையான மீன் சாப்பாடு, நண்டு சூப், கணவாய் கட்லெட் உள்ளிட்ட கடல் உணவுகளும், நன்னாரி சர்பத் போன்றவையும் கிடைக்கும். சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாவோடு அங்குள்ள அலையாத்தி காடுகளின் அவசி யத்தையும், அதைப் பாதுகாப் பதன் நோக்கத்தையும் புரிந்து கொள்ள இந்தச் சூழல் சுற்றுலா வழிவகுக்கும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments