கடந்த அக்.17 அன்று தொடங்கிய மஜகவின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
எதிர்வரும் டிச.31 தேதியை இலக்காக கொண்டு தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கட்சியில் புதிய உறுப்பினராக இணைந்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் மஜக சார்பில் உறுப்பினர் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில், தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் அஜ்மீர் கான் மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் கத்தாப் ஆகியோர் முன்னிலையில் கோட்டைப்பட்டிணம், அம்மாபட்டிணம், கட்டுமாவடி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் சாஜிதீன் உறுப்பினர் சேர்ப்பு முகாம்களை துவக்கி வைத்தார். இளைஞர்கள் உள்ளிட்ட பலர் தங்களை ஆர்வமுடன் மஜகவின் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.
இணைத்துக் கொண்டவர்களுக்கு முதற்கட்டமாக உறுப்பினர் அட்டைகளை மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி வழங்கினார்
மேற்கண்ட உறுப்பினர் சேர்ப்பு முகாம்களில் மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், கோட்டைப்பட்டிணம் கிளை செயலாளர் பரக்கத் அலி, கிளை பொருளாளர் ஜூபைர் கான், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் தாஜ்தீன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் அமீது,சதாம் உசேன் என்ற மன்னார் உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கேற்றனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments