கோபாலப்பட்டிணத்தில் வானம் மேகமூட்டத்துடன் பெய்த மிதமான மழை.!!
கோபாலப்பட்டிணத்தில் வானம் மேகமூட்டத்துடன் பெய்த மிதமான மழை.!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் காற்றின் திசைவேக மாறுபாட்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில்  இன்று அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

டிசம்பர் 31 வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து தூறியபடியே இருந்தது. அவ்வப்போது இடையில் விட்டு விட்டு கன மழை  பெய்தது. வானில் மேகம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. விட்டு விட்டு பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை நீரோடு மழை நீரும் கலந்து சாலையில் பாய்ந்தோடியது. 
இந்த மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால்  குழந்தைகள் வயதானவர்கள்  மற்றும்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து கும்மிருட்டாய் காட்சியளித்து மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments