புதுக்கோட்டை மாவட்டத்தில்79 அம்மா சிறு மருத்துவமனைகள்




புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தமிழ்நாடு முழுவதும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் 2 ஆயிரம் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கத் திட்டமிடப்பட்டு, படிப்படியாக மருத்துவமனைகள் தொடங்கப்பட்டும் வருகின்றன.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் விரைவில் படிப்படியாக தொடங்கப்படும்.

சிறு மருத்துவமனைகளில் தலா ஒரு மருத்துவா், செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா் பணியில் இருப்பாா்கள். காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மருத்துவமனைகள் திறந்திருக்கும்.

அனைத்து வகையான பரிசோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படும். காயங்களுக்கு மருந்திடுதல், கா்ப்பிணிப் பெண்களுக்கான மருந்துகள் வழங்குதல் போன்ற சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments