கோபாலப்பட்டிணத்தில் முக்கிய இடங்களில் மலை போல் குவிந்திருந்த குப்பைகளை அகற்றிய ஜமாத் நிர்வாகம்.!!.கோபாலப்பட்டிணத்தில் முக்கிய இடங்களில் குவிந்திருந்த குப்பைகளை ஊர் ஜமாத் நிர்வாகம் சார்பில் அகற்றும் பணி கடந்த 27.12.2020 அன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலை ( ECR ) பகுதியில் இயற்கை மற்றும் சுகாதாரம் சூழ்ந்த எழில்மிகு அழகிய கிராமமாக  கோபாலப்பட்டிணம் காட்சியளித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக கோபாலப்பட்டிணத்தில் முக்கிய வீதிகளில் குப்பைகள்  மலைபோல் குவிந்து வந்த நிலையில் குவிந்திருந்த குப்பைகளை குறிப்பாக ஆலமரம் ஈத்கா மைதானம் பகுதி, பழையகாலனி வழியாக ஊற்றுக்கு செல்லும் பகுதி, காட்டுகுளம் பகுதி மற்றும் சின்ன பள்ளிவாசல் பகுதியில் குவிந்திருந்த குப்பைகளை JCB மற்றும் டிராக்டர் உதவியுடன் அனைத்து பகுதியின் குப்பைகளும் அகற்றப்பட்டது. கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகம் சார்பில் கடந்த 27.12.2020 அன்று  நடைபெற்றது.

இதற்காக முயற்சி எடுத்த அனைத்து நல்லுங்களுக்கும் GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பலமுறை ஊர் ஜமாத் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பான தாய்மார்களே.... உங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதை தவிர்த்து தினந்தோறும் உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் குப்பை வண்டிகளில் கொடுத்து நாம் வசிக்கும் பகுதியை சுகாதாரமாக வைத்து கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் ஊர் ஜமாத், ஊராட்சி நிர்வாகம் மற்றும் GPM மீடியா சார்பாக  கேட்டுக்கொள்கின்றோம்.

 நம்முடைய பகுதியை நாம்தான் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும் ஆகவே ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்.

குறிப்பு: உங்கள் பகுதிக்கு குப்பை வண்டி வரவில்லையென்றால் வார்டு உறுப்பினரிடம் புகார் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்...

அவ்வாறு தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களுடைய GPM மீடியா வாட்ஸ்ஆப் நம்பருக்கு https://wa.me/918270282723 உங்கள் வீட்டின் வெளியே குப்பைகளை வைத்து புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்...

மாற்றம் ஒன்றே மாறாதது... ஆகவே முதலில் நம்மிடமிருந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்.. நமதூரை சுத்தமாக பராமரிப்போம்...

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments