தமிழக முதல்வருடன் கீழக்கரை அனைத்து ஜமாத் சார்பில் சந்திப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது


                    இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த தமிழக முதல்வர் அவர்களை   கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் 8ஜமாத்தில் உள்ள நிர்வாகிகளில் ஜமாத்திற்கு 3நபர்கள் வீதம் இன்று கீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் முதல்வரை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
         முன்னதாக முதல்வரை சந்திக்கும் நிகழ்வின் அழைப்பை ஏற்று நேற்று ஜும்மா பள்ளி மேல்தளத்தில் அமைந்துள்ள அனைத்து ஜமாத் கூட்டமைப்பு அலுவலகத்தில் 8ஜமாத் நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து கொண்டனர். முதல்வரை சந்தித்து ஊர் நலனை மேம்படுத்த தேவையானவற்றை மனுவாக எழுதி கொடுப்பது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
                    கோரிக்கைகள் :
      1. கடந்த 2010 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்த அரசு அதிகாரிகளின் ஆய்வுப் பணி நடந்து இதுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆகையால் தாங்கள் இதற்கு ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
2. அதே போல் கீழக்கரை பொதுமக்களின் அத்தியாவசியமான குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய  கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் அறிவிப்பு செய்தும் ஆய்வுப் பணிகள் நடந்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் தாங்கள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
       குடிநீரைத் தேக்குவதற்கு தனியார் பங்களிப்பு மூலம் மேலத்தெரு பகுதியில் அரசுக்கு வழங்கப்பட்ட இடத்தில் தண்ணீர்த் தொட்டி அமைத்து செயலாக்கம் பெறுவதற்கு ஆவண செய்யும்படியும், மேலும் சேதுக்கரையிலிருந்து கீழக்கரை நகருக்கு வரும் குடிநீர் குழாய்கள் பழுதடைந்துள்ளதால் அதை புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
3. ஏழை மாணவர்கள் இலவசமாக கல்வி பயில கீழக்கரையில் சிறந்த கல்வி மேம்பாட்டு திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கூடம் அமைத்து தரும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
4. CAA, NRC மற்றும் NPR போன்ற புதிதாக ஏற்படுத்திய குடியுரிமை திருத்தச்சட்டங்களை சிறுபான்மை சமுதாயம் பாதிக்கப்படுவதால் அந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும்படியும், இது விஷயமாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும்படியும், அதனடிப்படையில் அறவழிப் போராட்டம் நடத்திய கீழக்கரையைச் சேர்ந்த அனைத்து நபர்கள் மீதும் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை (F.I.R) யை ரத்து செய்யும்படியும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
5. கீழக்கரை அரசு மருத்துவமனையில் போதிய முழு நேர மருத்துவர்களையும் குறிப்பாக குழந்தை மருத்துவர்களையும், செவிலியர்களையும் அதிக அளவில் நியமிக்கும் படியும், காவல் துறையில் போதிய சிறப்பு காவலர்களை நியமிக்கும் படியும், நகராட்சியில் குறைவாக காணப்படும் தூய்மைப்பணியாளர்களை அதிகப்படுத்தும் படியும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
6. கீழக்கரை கடற்கரை ஜெட்டி பாலத்தை சீரமைத்து இங்கு மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தி கடல் அரிப்பையும் தடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயரச் செய்யும்படியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
7. கீழக்கரை கடற்கரை நகரமாக இருப்பதால் Fisheries & Marine கல்லூரி திறக்க ஆவண செய்யும்படியும், கடற்கரை ஓரத்தில் சாலை (Marine Drive) அமைத்துத்தர முயற்சி மேற்கொள்ளும்படி பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
8. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை, ஏர்வாடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரெயில் பாதைத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு அதற்குரிய முயற்சிகளும் எடுக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே தயவு செய்து தாங்கள் முயற்சி செய்து மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றித் தர வேண்டியும்,
       இத்துடன் வெளிநாடு செல்பவர்கள் குறுக்கு வழியில் பணம் பரிப்பவர்களிடம் சிக்காமல் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு வழிகாட்டி மையம் கீழக்கரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
                        தகவல்  : மக்கள் டீம் :
கீழக்கரை மக்கள் பொது தளம்
02/01/2021
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments