கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் நற்பணி மன்றம் மற்றும் நூலகம் முகப்பில் உள்ள கருவேல மரங்கள் அகற்றம்..கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் நற்பணி மன்றம் மற்றும் நூலகம் முகப்பில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.

இயற்கைக்கு கேடு விளைவிப்பதில் கருவேல மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை தான் நிலத்தடி நீர்மட்டம், பிற மரங்களின் வளர்ச்சிக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள உமர் முக்தார் நற்பணி மன்றம் மற்றும் நூலகம் முகப்பில் உள்ள கருவேல முன்பகுதியில் காடுபோல் அடர்ந்திருந்த கருவேல மரங்களை கடந்த 27  ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது.

அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி மன்ற சார்பில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. 

மேலும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று நூறு நாள் வேலை மூலம் அங்கு வளர்ந்திருந்த செடிகளை சுத்தம் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. பின்னர் உமர் முக்தார் நற்பணி மன்றம் மற்றும் நூலகம் முன்பகுதியில் அடர்ந்து காணப்பட்ட கருவேல மரங்களை ஜமாத் நிர்வாகம் JCB உதவியுடன் வேருடன் பிடுகிங்கி அப்பகுதியை சுத்தம் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments