"டிராக்டர்கள் தான் அவர்களது பீரங்கிகள் என்பதை மறந்து விடாதீர்கள்''- விவசாயிகளின் நீதி கேட்டு நெடுபயணத்தில் திருவாரூரில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேச்சு 

            "டிராக்டர்கள் தான் அவர்களது பீரங்கிகள் என்பதை மறந்து விடாதீர்கள்''- விவசாயிகளின் நீதி கேட்டு நெடுபயணத்தில் திருவாரூரில் மஜக பொதுச்செயலாளர்  தமிமுன் அன்சாரி பேச்சு

           மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதிகேட்டு நெடும்பயணத்தை நடத்தி வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் பரப்பான இந்நிகழ்வில் இன்று திருவாரூரில் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார்.  அப்பொழுது, ''புறாவுக்காக தன் தொடை சதையை அறுத்துக் கொடுத்து நீதியை நிலைநாட்டிய சோழமன்னர் சிபி ஆண்ட திருவாரூரில் இன்று மத்திய அரசிடம் நீதி கேட்டு நிற்கிறோம். விவசாயிகளை அலட்சியப் படுத்துபவர்கள் நம் நாட்டில் வென்றதில்லை என்பது வரலாறு. இன்று நம் விவசாயிகள் டெல்லியில் போராடுவதை நாடே உற்று கவனிக்கிறது.

உலகப் பத்திரிகைகள் முதல் பக்க செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.  ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அவர்கள் நம் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்திரிக்கிறார் .இந்தியா ஐ.நா.வில் ஒரு அங்கம் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் வழியெங்கும் நகரில் நடந்து வந்தோம். வீதிகளில், கடைகளில் நின்றவர்கள், கட்டிடங்களில் நின்றவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இரக்கம் சொட்ட நம் கோரிக்கையை கவனிப்பதை உணரமுடிந்தது என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments