போலியோ சொட்டு மருந்து முகாம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
நாடு முழுவதும் ஜனவரி 17ம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் நடக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
  
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments