‘புதுக்கோட்டையில் 6,849 பேருக்கு கரோனா தடுப்பூசி ஏற்பாடுகள் தயாா்’




புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக 6,849 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயாா்நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகளை 225 லிட்டா் அளவில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக 2 குளிா்சாதனப் பெட்டிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 6,849 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. இதில் 91 அரசு மருத்துவமனைகளில் 4,587 பேருக்கும், 378 தனியாா் மருத்துவமனைகளில் 1489 பேருக்கும், இவா்களுடன் 773 பேருக்கும் என மொத்தம் 6,849 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

இவா்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே தடுப்பூசி போடுவது குறித்த ஒத்திகையும் மாவட்டத்தில் 10 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தொடா்ச்சியாக 868 மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது என்றாா் உமா மகேஸ்வரி.

கூட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் கலைவாணி, விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments